சாத்தூர், பிப். 10: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அம்மனுக்கு காலை முதல் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்பட்டன. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து, பொங்கல் வைத்து, மொட்டை எடுத்தல், அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்தல் ஆகிய நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
சாத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவிற்குப் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக தென்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.