விருதுநகர், பிப். 10: விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என். நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி, மகள் விஜயகுமாரி (27), மகன் வெங்கடேஷ் ஆகியோர் திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு பஸ்ஸில் விருதுநகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
விருதுநகர் புது பஸ் நிலையத்தில் வந்து பார்த்தபோது விஜயகுமாரியைக் காணவில்லையாம்.
இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரியைத் தேடி வருகின்றனர்.