மள்ளர் என அழைக்கக் கோரி மனு: மத்திய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பரிசீலிக்க உத்தரவு

மதுரை, பிப். 22: தேவேந்திரகுல வேளாளர், பள்ளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் என அழைக்காமல் மள்ளர் என அழைத்து, அதிலுள்ள உள்பிரிவுகளையும் மள்ளர் என  ஒருங்கிணைக்கக் கோரிய மனுவை, மத்திய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் 

மதுரை, பிப். 22: தேவேந்திரகுல வேளாளர், பள்ளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் என அழைக்காமல் மள்ளர் என அழைத்து, அதிலுள்ள உள்பிரிவுகளையும் மள்ளர் என  ஒருங்கிணைக்கக் கோரிய மனுவை, மத்திய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம்  பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

 இதுகுறித்து, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவஜெயபிரகாசம் தாக்கல் செய்த மனு:

 அரசின் சாதிகள் பட்டியலில் பள்ளர் எனக் குறிப்பிடப்பட்ட சமூகத்தினரை மள்ளர்  எனவும், தேவேந்திரகுலத்தான் என இருப்பதை, தேவேந்திரகுல வேளாளர் என மாற்றி மள்ளர் சாதியின் உள்பிரிவாக கொண்டுவர வேண்டும். பள்ளர் சாதியில் உள்ள 56 பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மள்ளர் என அழைக்கவேண்டும். இந்த பிரிவினர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் வைத்து அழைக்கக் கூடாது.

 இதுகுறித்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அதில், தேவேந்திரகுல வேளாளர் வகுப்பில் 7 உள்பிரிவுகளை வகைப்படுத்த அரசு உத்தரவிட்டது. அப்போது, தேவேந்திரகுல வேளாளர் வகுப்பில் உள்ள 25 உள் பிரிவினரையும் மள்ளர் என அழைக்குமாறு வகைப்படுத்தக் கோரினேன்.

 ஏனெனில், எல்லா மள்ளர் வகுப்பு பிரிவுகளையும் ஆதிதிராவிடர் பட்டியலில் கொண்டு வருவதால் ஒற்றுமை பாதிக்கும்.

 இதிலுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி கலாசாரம், பண்பாடு பழக்கவழக்கம் உள்ளது.

 தேவேந்திரகுல வேளாளர் என்ற தலைப்பில், மள்ளர் மற்றும் இதர சாதிப் பிரிவினரைக் கொண்டுவர முடியாது. வரலாற்றிலும், போர் திறத்திலும் முன்னணியில் இருந்த  மள்ளர்களின் முக்கியத்துவம், 16-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இருட்டடிப்பு  செய்யப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர்.  எனவே, பள்ளர் என அழைப்பதை மள்ளர் என அழைக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், ஆர்.கருப்பையா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இப்பிரச்னை குறித்து தமிழக அரசு ஏற்கெனவே ஒருநபர் கமிஷனை அமைத்துள்ளது. அதன் பரிந்துரைகளையும், மனுதாரரின்   கோரிக்கைகளையும், மத்திய அரசின் எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் பரிசீலனைக்கு வைக்க அரசு முதன்மைச் செயலர் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com