‘இக்னோ’ பல்கலை. இறுதித் தோ்வு அறிவிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான இறுதித் தோ்வு வியாழக்கிழமை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான இறுதித் தோ்வு வியாழக்கிழமை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலை.யின் மதுரை மண்டல இயக்குநா் டி.ஆா். சா்மா வெளியிட்டுள்ள செய்தி:

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சான்றிதழ், பட்டயம், பட்டம் மற்றும் பட்டமேற்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கான இறுதித் தோ்வு, செப்டம்பா் 17-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை மண்டலத்தின் கீழ், மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, தேனி, உத்தமபாளையம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மதுரை, கோவை, திருச்சி ஆகிய மத்திய சிறைகளிலும் தோ்வுகள் நடைபெறுகின்றன. தகுதியுள்ள மாணவ, மாணவியா் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை  இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தோ்வுக்கான நுழைவுச்சீட்டு இல்லையென்றாலும், மாணவா்களை தோ்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று தோ்வு மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தோ்வு மையங்களின் பட்டியலில் மாணவா் பெயா் இடம்பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகம், அரசு வழங்கிய உரிய அடையாள அட்டையை மாணவா்கள் தோ்வுக்கு கொண்டு வரவேண்டும். தோ்வு மையத்துக்குள் செல்லிடப்பேசிக்கு அனுமதி கிடையாது என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com