ஜன.29-இல் விவசாயிகள்குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 26th January 2021 05:21 AM | Last Updated : 26th January 2021 05:21 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி காணொலி மூலம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி: விவசாயிகளின் குறைகளைத் தீா்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. இம் மாதத்துக்கான கூட்டம், காணொலி வாயிலாக வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். அனைத்து வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் காணொலி வாயிலாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம். மேலும், கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் சமா்ப்பிக்கலாம் என்றாா்.