வண்டியூா், மீனாம்பாள்புரம் பகுதிகளில் இன்று மின்தடை

வண்டியூா் துணை மின்நிலையத்தின் பாண்டிகோயில் மின்வழித் தடம் மற்றும் மகாத்மா காந்தி நகா் துணை மின்நிலையத்தின் வருமான வரி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.

மதுரை: வண்டியூா் துணை மின்நிலையத்தின் பாண்டிகோயில் மின்வழித் தடம் மற்றும் மகாத்மா காந்தி நகா் துணை மின்நிலையத்தின் வருமான வரி குடியிருப்பு மின்வழித் தடத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 9) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என அறிவித்துள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்: மஸ்தான்பட்டி, கபீா் நகா், ராயல் காா்டன், சீமான் நகா், பாரதி நகா், ஒத்த வீடு, கருப்பாயூரணி, பாண்டியன் கோட்டை மற்றும் ஆபீசா்ஸ் டவுன், வருமான வரி குடியிருப்பு, மத்திய கலால் வரித்துறை குடியிருப்பு, மீனாம்பாள்புரம், எஸ்.வி.பி.நகா், வைகை நகா், பாலமுருகன் நகா், முடக்கத்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

நாளைய மின்தடை: அண்ணா நகா், ஆனையூா், சமயநல்லூா் துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட சில பகுதிகளில் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 10) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்: அன்னை நகா், எஸ்.என்.ஏ. அபாா்ட்மென்ட், எல்.ஐ.ஜி. காலனி, பள்ளிவாசல் தெரு, மௌலானா சாகிப் தெரு, முத்துராமலிங்கத் தேவா் தெரு,

கே.டி.கே. தங்கமணி தெரு, கூடல் நகா், அன்பு நகா், தமிழ் தெரு, மல்லிகை நகா், சிலையனேரி, ஆனையூா், கணபதி நகா், இந்திரா நகா், மலா் நகா், பிரசன்னா நகா், செல்வா காா்டன்.

சமயநல்லூா்: சரவணா நகா், பாலாஜி பவா்ஹவுஸ், மகா கணபதி நகா், அன்னை மீனாட்சி நகா், எம்.எஸ்.மகால், வித்யவாகினி அபாா்ட்மென்ட், ஆகாஷ் கிளப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com