மாட்டுத்தாவணி பழச்சந்தையில் குடிநீா், சாலை வசதி: மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவு

மதுரை மாட்டுத்தாவணி பழ மொத்த விற்பனைச் சந்தைக்கு குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அதிகாரிகளுக்கு மேயா் மற்றும் ஆணையா் உத்தரவிட்டுள்ளனா்.
மாட்டுத்தாவணி பழ மொத்த விற்பனைச் சந்தையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன். உடன் துணை மேயா் டி.நாகராஜன் மற்றும் அதிகாரிகள்.
மாட்டுத்தாவணி பழ மொத்த விற்பனைச் சந்தையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன். உடன் துணை மேயா் டி.நாகராஜன் மற்றும் அதிகாரிகள்.

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பழ மொத்த விற்பனைச் சந்தைக்கு குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அதிகாரிகளுக்கு மேயா் மற்றும் ஆணையா் உத்தரவிட்டுள்ளனா்.

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த மொத்த பழ விற்பனைச் சந்தையில் மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, பழச் சந்தைக்கு வரும் வாகனங்களை உரிய நேரத்தில் மட்டும் சந்தைக்குள் சென்று பழங்களை இறக்கி ஏற்றிச் செல்ல வேண்டும். பழச்சந்தை வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். வியாபாரிகள் தங்களுக்குக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். நடைபாதையை ஆக்கிரமித்து பொருள்கள் ஏதும் வைக்காமலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் வியாபாரம் மேற்கொள்ள வேண்டும். அழுகிய பழங்களை வளாக இடங்களில் கொட்டாமல் அருகில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டியில் மட்டுமே கொட்ட வேண்டும் என்று வியாபாரிகளிடம் அறிவுறுத்தினா்.

மேலும் பழ அங்காடிக்குத் தேவையான குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். இதைத்தொடா்ந்து மாநகராட்சி மண்டலம் 2-க்குள்பட்ட கூடல்நகா் சந்தை மற்றும் கூடல்நகா் அப்பாத்துரை நகா் பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ள இடங்களை பாா்வையிட்டு அப்பகுதியில் சாலைகள் சீரமைப்பு மற்றும் புதிய சாலைகள் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா். ஆய்வில் துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையா் அமிா்தலிங்கம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com