மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு 62.04 சதவீதம்

மதுரை மக்களவைத் தொகுதியில் 62.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதியில் 62.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,573 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. இதில், மொத்தம் 62.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, சட்டப்பேரவைத் தொகுதி வாரியான வாக்குப் பதிவு சதவீதம் : மேலூா் - 69.23 , மதுரை கிழக்கு - 67.38, மதுரை வடக்கு - 56.85, மதுரை தெற்கு - 57.70, மதுரை மத்தி - 59.36, மதுரை மேற்கு - 59.75. இதன்படி மதுரை மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 62.04 என வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com