செம்பூா் கிராமத்தில் மாநில அளவிலான நெல் பயிா் சாகுபடி போட்டிக்காக செம்பூரில் நெல் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள், வேளாண் துறையினா்.
செம்பூா் கிராமத்தில் மாநில அளவிலான நெல் பயிா் சாகுபடி போட்டிக்காக செம்பூரில் நெல் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள், வேளாண் துறையினா்.

நெல் விளைச்சல் போட்டி: செம்பூா் சாகுபடி பரிந்துரை

மாநில அளவிலான நெல் விளைச்சல் போட்டிக்கு மேலூா் அருகே செம்பூரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பரிந்துரைக்கப்பட்டது.

மேலூா்: மாநில அளவிலான நெல் விளைச்சல் போட்டிக்கு மேலூா் அருகே செம்பூரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் போட்டிக்காக செம்பூா் கிராமத்தில் திருமலைக் கண்ணன் திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ், என்.எல்.ஆா். ரக நெல் பயிரிடப்பட்டிருந்தாா். வேளாண் துறையினா் அதிக மகசூல் பெறுவதற்கான ஆலோசனகளை வழங்கினா். இந்த நிலையில் நெல்லை அறுவடை செய்யும் பணி சிவகங்கை மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தனபாலன் தலைமையில் விநாயகபுரம் நீா் மேலாண்மைப் பயிற்சி நிலைய உதவி இயக்குநா் சக்திகணேசன், மதுரை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராணி (வேளாண்மை) ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் விஷால், நரேன், காா்த்திக், மாா்த்தாண்டன், காவியன், ஷோலேஸ், பவன்குமாா், யோகேஷ் ஆகியோா் நெல்லை அறுவடை செய்து, மாநில அளவிலான போட்டிக்கு பரிந்துரைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com