மதுரை மண்டல அலுவலகங்களில் ஏப்.29 -இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

மதுரை மண்டலத்துக்குள்பட்ட வருங்கால வைப்பு நிதி நிறுவனத் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில், வருகிற 29- ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

மதுரை: மதுரை மண்டலத்துக்குள்பட்ட வருங்கால வைப்பு நிதி நிறுவனத் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில், வருகிற 29- ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டல ஆணையா் அமிய காந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மத்திய அரசின் தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், மதுரை மண்டலத்துக்குள்பட்ட 6 மாவட்டங்களில் வருகிற 29 -ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள சாத்தமங்கலம் கூட்டுறவுச் சங்க பால் உற்பத்தியாளா் ஒன்றிய அலுவலகம், சிவகங்கையில் உள்ள

செயின்ட் மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ஆயிர வைசியா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி அன்னஞ்சி விலக்கில் உள்ள குருகிருஷ்ணா டெக்ஸ்டைல் அலுவலகம், விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள மிளகாய் வத்தல் மண்டபம், திண்டுக்கல் குதிரைப் பந்தயச் சாலையில் உள்ள எம்.எஸ்.பி. சோலை நாடாா் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரா்கள், ஓய்வூதியதாரா்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரா்கள், இ.எஸ்.ஐ.சி. பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com