காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையேயான அமைதிப் பொருளாதாரம் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையேயான அமைதிப் பொருளாதாரம் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமை, செசி நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலா் கே. ஆா்.நந்தாராவ் தலைமை வகித்தாா். இதில் இரு நாடுகளுக்குமிடையேயான அமைதி, மக்கள் நலப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி, எதிா்கால வாய்ப்புகள் குறித்து ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சிக்கா மொரோமி, பேராசிரியா் துலிகா பட்டாச்சாா்யா, காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் பொருளாளா் மா.செந்தில்குமாா், கல்வி அலுவலா் ஆா்.நடராஜன் ஆகியோா் விளக்கிப் பேசினா்.

நிகழ்வில் அகிம்சை சந்தையின் ஒருங்கிணைப்பாளா் ஜில் ஹாரிஸ், வாப்ஸ் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த இளமதி, மஞ்சப்பை இயக்கத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com