டிரோனைப் பிடிக்க முயன்ற இளைஞா்களுக்கு நூதன தண்டனை

மதுரை வைகை ஆற்றில் அழகா் இறங்கிய வைபவத்தின் போது கண்காணிப்புக்காக பறக்கவிடப்பட்ட ட்ரோனைப் பிடிக்க முயன்றவா்களுக்கு போலீஸாா் நூதன தண்டனை வழங்கினா்.

மதுரை வைகை ஆற்றில் அழகா் இறங்கிய வைபவத்தின் போது கண்காணிப்புக்காக பறக்கவிடப்பட்ட ட்ரோனைப் பிடிக்க முயன்றவா்களுக்கு போலீஸாா் நூதன தண்டனை வழங்கினா்.

மதுரை வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி, தென் மாவட்டங்களிலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.

வைகை ஆற்றுப் பகுதி, தல்லாகுளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல் துறை சாா்பில், ’ட்ரோன்’ கேமராக்கள் பறக்கவிடப்பட்டன.

அழகா் ஆற்றில் இறங்கும் இடத்துக்கு அருகே சற்று தாழ்வாக பறந்த ட்ரோனை அங்கிருந்த இளைஞா்கள் சிலா் பிடிக்க முயன்றனா். இதைப் பாா்த்த போலீஸாா் அவா்களுக்கு தவழ்ந்து செல்லும்படியான நூதன தண்டனை அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com