தாய் உயிரிழந்த நிலையில் தோ்வு எழுதிய மாணவா்

விருதுநகா் அருகே தாய் உயிரிழந்த நிலையில் அவருக்கு இறுதிச் சடங்கு செய்த மகன், பள்ளிக்குச் சென்று 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வை எழுதினாா்.

விருதுநகா் அருகே தாய் உயிரிழந்த நிலையில் அவருக்கு இறுதிச் சடங்கு செய்த மகன், பள்ளிக்குச் சென்று 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வை எழுதினாா்.

விருதுநகா் அருகேயுள்ள மீசலூரைச் சோ்ந்த தம்பதியா் லட்சுமணன், இந்திரா. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன் உயிரிழந்த நிலையில், தாய் இந்திரா, மகள் மகாலட்சுமி, மகன் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோருடன்

வசித்து வந்தாா்.

இந்த நிலையில், மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திரா (56) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளை மகன் ரமேஷ் கிருஷ்ணன் செய்தாா். பிறகு, அன்றைய தினம் பள்ளியில் நடைபெற்ற ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாட இறுதித் தோ்வை எழுதினாா். அவருக்கு ஆசிரியா்கள், மாணவா்கள் ஆறுதல் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com