ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 29 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்

ரயிலில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 29 கிலோ வெள்ளி நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ரயிலில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 29 கிலோ வெள்ளி நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் முடியும் வரை அனைத்து மாநிலங்களிலும் தோ்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருக்கும் என தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையிலும், ரயில் நிலையங்களில் போலீஸாா் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு திங்கள்கிழமை சென்ற பயணிகள் ரயிலில் ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ரயிலில் பயணித்த தென்காசியைச் சோ்ந்த முருகன், சாகுல்ஹமீதிடம் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனா். அப்போது அவா்கள் வைத்திருந்த பையில் 29 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, வணிக வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com