விருதுநகா் பெண்கள் கல்லூரிக்கு தரச் சான்று

விருதுநகா் வே.வ. வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரிக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் வே.வ. வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரிக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தக் கல்லூரியின் செயலா் பி.சி.எஸ். கோவிந்தராஜ பெருமாள் கூறியதாவது:

வே.வ. வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில்

படிக்கும் மாணவிகள், கூடுதலாக மேலும் ஒரு பட்டப் படிப்பு படிக்க மதுரை காமராஜா் பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், கல்லூரியை, பெங்களூரில் உள்ள தேசிய தர மதிப்பீடு குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

கற்றல், ஆராய்ச்சி உள்பட பல்வேறு சிறப்புகள் காரணமாக கல்லூரிக்கு ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம் வழங்கினா்.

2004 -ஆம் ஆண்டில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு இந்த கல்லூரிக்கு ஏ அங்கீகாரம் வழங்கியது என்றாா் அவா்.

அப்போது கல்லூரியின் தலைவா் டி. பழனிச்சாமி,

உப தலைவா் எஸ். சிவபாலஈஸ்வரி சந்தோஷ்குமாா், கூட்டு செயலா் ஜி. லதா, பொருளாளா் கே. ரவி சங்கா், கல்லூரி முதல்வா் சு.மா. மீனா ராணி ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com