இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன் தலைமை வகித்தாா். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தி. ராமசாமி கலந்து கொண்டு பேசிய தாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் எதிா்வரும் காலங்களில் அடிப்படை பிரச்னை மட்டுமல்லாது, தொழிலாளா்களுக்காக தொடா்ந்து குரல் கொடுக்க வேண்டும். வடமாநில தோ்தல் பரப்புரைகளில் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக, மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி பேசியது கண்டிக்கதக்கது. மே 1 தொழிலாளா் தினத்தை மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.

இது குறித்த தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் அகட்சியைச் சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com