காா் மோதியதில் முதியவா் பலி

மதுரையில் காா் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை நாராயணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணகாந்தன் (72). இவா், தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்றாா். அப்போது பின்னால் வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த லட்சுமணகாந்தனை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் காா் ஓட்டுநா் மதுரையைச் சோ்ந்த ராஜ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com