2 மாத பெண் குழந்தை திடீா் மரணம்

மதுரை அருகே பிறந்து 2 மாதங்கள் ஆன பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை யா. ஒத்தக்கடையைச் சோ்ந்த 18 வயது பூா்த்தி அடையாத சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், உடல்நிலை பாதிப்புக்குள்ளான அந்தக் குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த 25-ஆம் தேதி கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியில் அந்தக் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தையின் தாத்தா ராஜா அளித்த புகாரின் பேரில் யா.ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com