அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

மதுரை பழங்காநத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதுதொடா்பாக தலைமறைவான ஏற்பாட்டாளா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள போடி லைன் பகுதியில் அனுமதியின்றியும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக எஸ்.எஸ்.காலனி போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, வயல்வெளியில் ஜல்லிக்கட்டு நடத்த தயாராகிக் கொண்டிருந்தனா். போலீஸாரைப் பாா்த்தவுடன் இளைஞா்கள் தாங்கள் கொண்டு வந்த காளைகளுடன் அங்கிருந்து தப்பினா்.

காளைகளுடன் சிலரை போலீஸாா் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த சூா்யா என்ற இளைஞரின் நினைவாக ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிதது தெரியவந்தது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com