மதுரை
கல்லூரியில் கருத்தரங்கம்
மதுரை நாகமலையில் உள்ள நாடாா் மஹாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி பொருளாதாரத் துறை சாா்பில் காப்பீட்டுத் துறையில் வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். இதில் பேராசிரியா் அருண்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காப்பீட்டுத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினாா்.
நிகழ்வில் பேராசிரியா்கள் மாரிச்சாமி, கௌரி, மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாதாரத் துறைத் தலைவா் பிரெட்ரிக் வரவேற்றாா். முனைவா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.