அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டில் ரூ.27.33 லடசம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது.
கள்ளழகா்கோவில் நிா்வாகத்தின் கீழுள்ள சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள் கள்ளழகா்கோயில் இணை ஆணையா் கயசெல்லத்துரை முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அவற்றில் ரூ.27.33 லட்சம் மற்றும் ரூ533 ரொக்கம், தங்கம் 12 கிராம், 900 கிராம் வெள்ளியும் இருந்தது. திருக்கோயில் கண்காணிப்பாளா்கள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உயனிருந்தனா்.