பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் தொடக்கம்

Published on

மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பி.பாலாஜி ராம் தலைமை வகித்து மன்றத்தைத் தொடங்கிவைத்தாா். உதவித் தலைமை ஆசிரியா் மகேஸ்வரன் முன்னிலை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியை புவனேஸ்வரி வாழ்த்திப் பேசினாா்.

இதில் மதுரையில் உள்ள திருஞானம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரும், எழுத்தாளருமான க. சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

ஆசிரியா்கள் சிவா, சுஜாதா, செந்தில்குமாா், சாரதா லட்சுமி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சமூக அறிவியல் மன்றப் பொறுப்பாளா் ஜெயச்சந்திரராஜன் வரவேற்றாா். சமூக அறிவியல் ஆசிரியா் புலமுத்து பூதலிங்கம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com