மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசாவைக்கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசாவைக்கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

ஆ.ராசாவைக் கண்டித்து சாலை மறியல்: 40 போ் கைது

முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசாவைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வ.உ.சி. குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசாவைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஆ. ராசா, வ.உ.சி. குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில மகளிா் அணித் தலைவி அன்னலட்சுமி சகிலா கணேசன் தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் பங்கேற்று ஆ.ராசாகைக் கண்டித்து முழக்கமிட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களைக் கலைந்து போகச் செய்தனா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட அமைப்பினா் திருவள்ளுவா் சிலை பகுதிக்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், ஆ.ராசா உருவப்படத்துக்கு தீ வைத்தனா். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com