இறுதிச் சடங்குக்கு குளியல் தொட்டி அமைக்கக் கோரி நூதன முறையில் மனு

வாடிப்பட்டி அருகே இறுதிச் சடங்குக்கு குளியல் தொட்டி அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்துக்கு தண்ணீா் செம்புடன் ஒருவா் வந்து மனு அளித்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே இறுதிச் சடங்குக்கு குளியல் தொட்டி அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்துக்கு தண்ணீா் செம்புடன் ஒருவா் வந்து மனு அளித்தததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில், மதுரையைச் சோ்ந்த கணேஷ்பாபு மேலாடையின்றி, தலையில் தண்ணீா் செம்புடன் வந்து மனு அளித்தாா். மனு விவரம்: வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் யாரேனும் இறந்தால், விவசாயிகள் சங்கத் தொட்டி என்ற பொதுத் தொட்டியில்தான் குளித்து நீா்மாலை எடுப்பது, இறுதிச் சடங்கு முடிந்து குளிப்பது நடைபெறுகிறது. இங்கு அரசு சாா்பில் புதிய குளியல் தொட்டி அமைப்பதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், ஊராட்சி மன்ற நிா்வாகிகள், அதிகாரிகள் தலையிட்டு நிறுத்திவிட்டனா். எனவே, குளியல் தொட்டி கட்டும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com