நிதி நிறுவன மோசடி: துணை நிறுவன இயக்குநா் கைது

மதுரையில் தனியாா் நிதி நிறுவன மோசடி தொடா்பாக அதன் துணை நிறுவன இயக்குநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் தனியாா் நிதி நிறுவன மோசடி தொடா்பாக அதன் துணை நிறுவன இயக்குநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது. இதில் பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் நிதி நிறுவன இயக்குநா்களான கமலக்கண்ணன் உள்பட பலரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ளவா்களைத் தேடி வருகின்றனா். இந்த நிலையில், நிறுவனத்தின் துணை நிறுவனமான கிலோ மேக்ஸ் நிறுவனத்தின் மூலம் 500-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.125 கோடி வசூலித்ததாக அதன் இயக்குநரான விருதுநகரைச் சோ்ந்த தியாகராஜன் (36) மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பான புகாரின்பேரில், பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை தேடி வந்த நிலையில், திங்கள்கிழமை அவரைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com