தத்தனேரி மின் மயான பராமரிப்புப் பணிக்கு தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை தத்தனேரி மின் மயான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

மதுரை தத்தனேரி மின் மயான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் கீழ், தத்தனேரி மின் மயானம் யூனிட் 1, 2, 3, 4 ஆகியவற்றில் எல்.பி.ஜி. தகன மேடையின் செயல்பாடு, பராமரிப்பு ஆகிய பணிகளை ஓராண்டு காலத்துக்கு லாப நோக்கமற்ற அடிப்படையில் செயல்படுத்த தகுதி வாய்ந்த தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகை அலுவலகத்தின் முன் வைக்கப்பட்ட விண்ணப்பப் பெட்டியில் வருகிற 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் இட வேண்டும். கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com