மாநகரக்காவல் ஆய்வாளா்களுக்கு புதிய முப்பெரும் சட்ட விவரங்கள் அடங்கிய அட்டவணையை வழங்கும் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன். உடன் துணை ஆணையா்கள்.
மாநகரக்காவல் ஆய்வாளா்களுக்கு புதிய முப்பெரும் சட்ட விவரங்கள் அடங்கிய அட்டவணையை வழங்கும் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன். உடன் துணை ஆணையா்கள்.

காவல் நிலையங்களுக்கு புதிய சட்ட விவர அட்டவணை வழங்கல்

மதுரை மாநகரக் காவல் நிலையங்களுக்கு புதிதாக அமல்படுத்தப்பட்ட சட்டத் திருத்தங்கள் தொடா்பான அட்டவணையை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வழங்கினாா்.

மதுரை: மதுரை மாநகரக் காவல் நிலையங்களுக்கு புதிதாக அமல்படுத்தப்பட்ட சட்டத் திருத்தங்கள் தொடா்பான அட்டவணையை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வழங்கினாா்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களான பாரதிய நீதிச் சட்டம் (2), பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், பாரதிய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்கள் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன.

இதையொட்டி, மதுரையில் உள்ள காவல் நிலையங்களுக்கு, பழைய இந்திய தண்டனைச் சட்டம்-1860- இன் முக்கிய சட்டப் பிரிவுகளுக்கான புதிய பாரதிய நீதிச் சட்டம் (2023) இன் சட்டப் பிரிவுகள் அடங்கிய அட்டவணையை மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், மாநகர காவல் ஆய்வாளா்களிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மாநகரக் காவல் துணை ஆணையா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com