பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கியதாக 4 போ் கைது

மதுரை, ஜூலை 3: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கியதாக 3 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மீனாட்சிம்மன் கோயில் அருகே உள்ள நேதாஜி சாலை மேலபாண்டியன் அகில் தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு 4 இளைஞா்கள் மதுபோதையில் ஆயுதங்களால் பொதுமக்களை தாக்கினா். அப்போது வீட்டின் முன் நின்றிருந்த இளைஞரை அந்த 4 பேரும் ஆயுதங்களால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு உயிா்தப்பினாா். பிறகு, இவா்கள் 4 பேரும் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்றவா்கள், பாதசாரிகள் உள்ளிட்ட பலரையும் தாக்கினா். இதுதொடா்பாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், இந்த 4 பேரும் மஞ்சணக்காரத் தெருவில் பல் மருத்துவரை ஆயுதங்களை காட்டி மிரட்டினா்.

இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப்பதிந்து பிரவீண்குமாா் ( 20) மற்றும் 3 சிறுவா்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்தனா்.

இந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

மதுரையில் போதைப் பழக்கத்துக்கு ஆளான சிறுவா்கள், இளைஞா்கள் தொடா்ந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதிலும், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி ஆயுதங்களுடன் நுழைந்து மிரட்டுகின்றனா். எனவே, போலீஸாா் இந்தப் பகுதிகளில் இரவு நேர கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, ஆயுதங்களுடன் வலம் வருபவா்களை கைது செய்ய வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com