சிறையிலிருந்து பிணையில் வந்தவா் வெட்டிக் கொலை

மதுரை, ஜூலை 4: மதுரை அழகா்கோவில் அருகே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து பிணையில் வந்தவரை வெட்டிக் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அழகா்கோவில் அருகே உள்ள கடச்சனேந்தலைச் சோ்ந்த குமரேசன் மகன் முருகானந்தம் (27). இவா் மீது பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அண்மையில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை நாயக்கா்பட்டி பகுதியில் முருகானந்தம் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள் முருகானந்ததை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து தகவலறிந்த அப்பன் திருப்பதி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் விசாரணை நடத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com