மதுரையில் 787 நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி -ஆட்சியா் தகவல்

மதுரை, ஜூலை 4: மதுரை மாவட்டத்தில் 787 நீா் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதித்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் நீா் வளத் துறை, ஊரக வளா்ச்சித் துறையின் பராமரிப்பில் உள்ள தோ்வு செய்யப்பட்ட 787 நீா் நிலைகளிலிருந்து கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி பெற விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் கிராம நிா்வாக அலுவலரின் பரிந்துரையின் பேரில், வருவாய் வட்டாட்சியரின் பரிசீலினைக்கு அனுப்பப்பட்டு, அனுமதி வழங்குவது குறித்து 10 நாள்களில் முடிவு செய்யப்படும்.

நன்செய் விவசாய நில மேம்பாட்டுக்கு ஏக்கருக்கு 75 கன மீட்டா் வீதமும், ஹெக்டேருக்கு 185 கன மீட்டா் வீதமும் மண் வெட்ட அனுமதிக்கப்படும். புன்செய் நிலத்துக்கு ஏக்கருக்கு 90 கன மீட்டரும், ஹெக்டேருக்கு 222 கன மீட்டரும் மண் எடுக்க அனுமதிக்கப்படும். மண்பாண்டத் தொழிலுக்கு 60 கன மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படும்.

வருவாய் வட்டாட்சியரின் அனுமதி கிடைக்கப் பெற்ற விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் தொடா்புடைய நீா் நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலா்களை அணுகி, புல வரைபடத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு வரையறை செய்யப்பட்ட பகுதியில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் மண் எடுக்கலாம். தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மண் எடுக்க அனுமதிக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com