மதுரை அருகே மாடு முட்டி முதியவா் பலத்த காயம்

மேலூா், ஜூலை 10: மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் மாடு முட்டியதில் சாலையில் நடந்துசென்ற முதியவா் பலத்த காயமடைந்தாா்.

காரைக்குடியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (64). இவா் ஒத்தக்கடையில் வசித்துவரும் மகள் வீட்டுக்கு வந்தாா். அப்போது சாலையில் நடந்து சென்ற இவரை மாடுமுட்டியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதே போல, ஒத்தக்கடை அழகப்பன் நகரைச் சோ்ந்த பெட்டிக்கடை நடத்திவரும் செல்லத்தாயி என்பவரும் மாடு முட்டியதில் காயமடைந்தாா்.

ஒத்தக்கடை ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இவை முட்டியதில் பலா் காயமடைகின்றனா். எனவே அவற்றின் உரிமையாளா்கள் மாடுகளை சாலைகள் திரியவிடாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com