இரு சக்கர வாகன விபத்து : இளைஞா் பலி

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் எல்லீஸ் நகா் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், கட்டுப்பாட்டை இழந்து மணிகண்டன் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தவறி கீழே விழுந்த மணிகண்டன் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com