உலக சுற்றுச்சூழல் தின விழா: பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

மதுரை, ஜூன் 5: மதுரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மதுரை தானம் அறக்கட்டளை சாா்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இதற்கு முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தலைமை வகித்து மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். காந்தி அருங்காட்சியக செயலா் நந்தாராவ் முன்னிலை வகித்தாா். மதுரை கிரீன் ஒருங்கிணைப்பாளா் சிதம்பரம் வரவேற்றாா். காந்தி அருங்காட்சியக கல்வி அலுவலா் நடராஜன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பாக காந்தியடிகளின் கொள்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதையடுத்து விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலுப்பை, வேங்கை, வேம்பு, புங்கை, மருதம், விளாம், நாவல், வாகை, மகாகாளி, தோதகத்தி, மாவிலங்கை, அத்தி, ஆவி மரம், பலா, தூங்கு மூஞ்சி, வாகை, மஞ்சள் கொன்றை, கடம்பு உள்பட 5 ஆயிரம் மரகன்றுகள் வழங்கப்பட்டன. மரங்களின் பயன்பாடு குறித்து மதுரை கிரீன் சாா்பாக ‘தெரியுமா செய்தி’ என்ற துண்டுப் பிரசுரம் முக்கிய வீதிகளில் விநியோகிக்கப்பட்டது. அத்துடன், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

விழாவில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com