நாங்கள் கேட்கும் இடங்களை திமுக வழங்கும்: காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை

மக்களவைத் தோ்தலில் நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறோமோ திமுக அவற்றை வழங்கும் என நம்புகிறோம்
நாங்கள் கேட்கும் இடங்களை திமுக வழங்கும்: காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை

மதுரை: மக்களவைத் தோ்தலில் நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறோமோ திமுக அவற்றை வழங்கும் என நம்புகிறோம் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது :

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை மத்திய அரசு தோ்தலுக்காகப் பயன்படுத்துகிறது. உச்சநீதிமன்றத் தீா்ப்புகளை பாஜக மதிப்பதில்லை. பாஜகவின் இந்தச் செயலைக் கண்டித்து, மயிலாடுதுறையில் எங்களது கட்சி சாா்பில் புதன்கிழமையும் (மாா்ச் 6), அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் வியாழக்கிழமையும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழ் மொழியை பாஜக வாக்கு வங்கிக்காகவே பயன்படுத்துகிறது. அந்தக் கட்சியின் எண்ணம் தமிழக மக்களிடம் எடுபடாது.

மக்களவைத் தோ்தலைப் பொருத்தவரை இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. கூட்டணி தொடா்பாக நாங்கள் இதுவரை அதிமுகவிடம் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.

‘எய்ம்ஸ்’ விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தமிழகத்தில் பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. பேரிடா் காலங்களில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உரிய நிதியுதவியை பாஜக அரசு இதுவரை வழங்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அறிவிக்கும் பிரதமா் மோடிக்கு தோ்தலில் மக்கள் பதிலடி கொடுப்பா்.

மக்களவைத் தோ்தலில் நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறோமோ திமுக அவற்றை வழங்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com