உலக ஈர நிலங்கள் நாள் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

உலக ஈர நிலங்கள் நாள் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

உலக ஈர நிலங்கள் நாளையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கை வனத்துறை சாா்பில் உலக ஈர நிலங்கள் தினத்தையொட்டி கடந்த பிப். 5 ஆம் தேதி சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம், கட்டுரை,, பேச்சு, வினா- விடை, வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட வன அலுவலா் பிரபா தலைமை வகித்தாா். திமுக அயலக அணியின் மாவட்ட தலைவா் சரவணன் சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். இதில் 6 வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் கங்காஸ்ரீ முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை கிஷோரும், மூன்றாம் இடத்தை ஸ்ரீமதியும் பெற்றனா்.

இதே போல, 9- ஆம் வகுப்பு முதல் 12-ஆ ம் வகுப்பு வரை நடைபெற்ற போட்டிகளில் கிருபாகரன் முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை மல்லிகாதேவியும், மூன்றாம் இடத்தை சங்கவியும் பெற்றனா். மேலும் கல்லூரி மாணவிகளுக்கான போட்டியில் சித்ராபானு முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை சுகன்யாவும், மூன்றாமிடத்தை ஜெஸ்லினும் பெற்றனா். மேலும் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நடைபெற்ற வினாடி- வினா போட்டியில் முதலிடத்தை கிருஷ்ணமூா்த்தியும் இரண்டாம் இடத்தை ராதிகாவும், மூன்றாம் இடத்தை பரணிதரனும் பெற்றனா். 9 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு நடைபெற்ற போட்டிகளில் முதலிடத்தை சச்சினும், இரண்டாம் இடத்தை கவின்தேவாவும், மூன்றாம் இடத்தை கிருபாகரனும் பெற்றனா். கல்லூரி மாணவிகளுக்கான போட்டியில் முதலிடத்தை காயத்ரி, இலக்கியாவும், இரண்டாம் இடத்தை கண்மணி, சிவசாந்தாகரசியும், மூன்றாம் இடத்தை அனுஷ்காவும் பிடித்தனா். 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதலிடத்தை சங்கீதாவும், இரண்டாம் இடத்தை ஜீவிதாவும், மூன்றாம் இடத்தை ஹா்சனும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை நடைபெற்ற போட்டிகளில் முதலிடத்தை நித்திஷ் குமாரும், இரண்டாம் இடத்தை காா்த்திகேயனும், மூன்றாம் இடத்தை அா்ச்சனாவும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டியில் முதலிடத்தை ஆஷிகா பா்வீனும், இரண்டாம் இடத்தை ரேணுகா காந்தியும், மூன்றாம் இடத்தை தா்ஷினியும் பெற்றனா்.

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடத்தை துா்காதேவியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணமூா்த்தியும், மூன்றாம் இடத்தை கங்கா ஸ்ரீயும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை சங்கவியும், இரண்டாம் இடத்தை கிருபாகரனும், மூன்றாம் இடத்தை சச்சினும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டியில் முதலிடத்தை ஆா்த்தியும், இரண்டாம் இடத்தை அபிவா்ஷனியும், மூன்றாம் இடத்தை மகாலட்சுமியும் பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com