தொழில்நுட்ப மேம்பாடு: அமெரிக்கன் கல்லூரி- தனியாா் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில்நுட்ப மேம்பாடு: 
அமெரிக்கன் கல்லூரி- தனியாா் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதுகலை தரவு அறிவியல் துறை, இளங்கலை தொழில் படிப்பு துறை, ஐபிஎம் கிளவுட்ஸ் டிஜிலேப்ஸ் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வரும், செயலருமான எம். தவமணி கிறிஸ்டோபா், ஐபிஎம் கிளவுட்ஸ் டிஜிலேப்ஸ் நிறுவனத்தின் மண்டல தலைமை அதிகாரி வினோத்குமாா் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கான ஆணையை பரிமாறிக் கொண்டனா். இதன்மூலம், கல்லூரி மாணவ, மாணவிகள் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் துறையில் புதுமை, மெய்நிகா் ஆய்வகங்கள் குறித்து அறிய உதவியாக இருக்கும். இந்த நிகழ்வில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com