நியாயவிலைக் கடை ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சிவகங்கை அருகே நியாவிலைக்கடை பெண் ஊழியரிடம் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரி (48). இதே ஊரில் உள்ள நியாயவிலைக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிகிறாா். இவா் புதன்கிழமை திருப்புவனத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது பனையூா் பேருந்து நிறுத்தம் அருகே கீழக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (22) சுந்தரியை பாா்த்து சப்தம் போட்டாராம். இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து சுந்தரி நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அப்போது ரமேஷ்குமாா், சுந்தரியிடமிருந்த பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இந்தப் பையில் 6 பவுன் தங்கச்சங்கிலி வைத்திருந்தாராம். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ்குமாரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com