‘நீட்’ நுழைவுத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவு

மதுரை மாவட்டத்தில் நீட் நுழைவுத் தோ்வுகான இலவச பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றன.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நடை பெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்த 490 மாணவ, மாணவிகளுக்கு மதுரைக் கல்லூரி வாரிய மேல்நிலைப் பள்ளி, ஒத்தக்கடை மாதிரிப் பள்ளி, திருமங்கலம் பி.கே.என். பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

கடந்த மாா்ச் 27- ஆம் தொடங்கிய இந்த வகுப்பில் தமிழ், ஆங்கில வழியில் பயிற்சிகள், தோ்வுகள் நடைபெற்றன. இந்த மையங்களில் இயற்பியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கினா். மேலும், சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகளும், திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெற்றன. இதனிடையே, வியாழக்கிழமை (மே 2) நீட் நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவு பெற்ாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com