பைக் மோதி பள்ளி மாணவா் பலி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற மாணவா் இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள கொங்கபட்டியைச் சோ்ந்த எபினேசா் மகன் சுதீஷ்குமாா் (17). பிளஸ் 2 படித்து வரும் இவா் புதன்கிழமை மாலை தனிப்பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு இரவில் உசிலம்பட்டியிலிருந்து ஷோ் ஆட்டோவில் கொங்கபட்டிக்கு வந்தாா். பின்னா், ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்குச் செல்ல சாலையை கடக்க முயன்றாா். அப்போது, எருமாா்பட்டியைச் சோ்ந்த அன்பழகன் (35) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com