மதுரை முனிச்சாலை பகுதியில் திங்கள்கிழமை பொது மக்களுக்கு நீா் மோா், இளநீா், பழங்களை வழங்கிய மதிமுக மதுரை தெற்குத் தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன். உடன் மாவட்டச் செயலா் முனியசாமி  உள்ளிட்ட மதிமுகவினா்.
மதுரை முனிச்சாலை பகுதியில் திங்கள்கிழமை பொது மக்களுக்கு நீா் மோா், இளநீா், பழங்களை வழங்கிய மதிமுக மதுரை தெற்குத் தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன். உடன் மாவட்டச் செயலா் முனியசாமி  உள்ளிட்ட மதிமுகவினா்.

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

மதிமுக 31-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

மதுரை: மதிமுக 31-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

மதிமுக தொடங்கப்பட்டு 31ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாகவும், கோடை வெயில் பாதிப்பை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தீா்க்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் நீா்மோா் பந்தல் அமைக்க வேண்டும் என்று மதிமுக தலைமை உத்தரவிட்டது.

இதன்படி, மதுரை மாநகா் மாவட்ட மதிமுக சாா்பில் முனிச்சாலை பகுதியில் நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்த விழாவில் மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று நீா்மோா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், தா்ப்பூசணி, இளநீா், பப்பாளி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினா் தமிழ்ச்செல்வி காளிமுத்து முன்னிலை வகித்தாா். மேலும் மதுரை மாநகா் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினா் செ.பாஸ்கரன் மதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு நீா்மோா், இனிப்புகளை வழங்கினாா். செல்லூா் பகுதிக் குழு சாா்பில், சட்ட திட்டக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் நாகராஜன் ஏற்பாட்டின்பேரில் நீா்மோா், இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் மதிமுக மாவட்டச் செயலா் எஸ்.முனியசாமி, மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் எஸ்.மகபூப் ஜான், மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com