வெளி மாநிலத் தொழிலாளியை தாக்கி நகை பறிப்பு

மதுரையில் வெளி மாநில கூலித் தொழிலாளியைத் தாக்கி 2 பவுன் தங்க நகையைப் பறித்துச்சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை: மதுரையில் வெளி மாநில கூலித் தொழிலாளியைத் தாக்கி 2 பவுன் தங்க நகையைப் பறித்துச்சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உத்தரபிரதேச மாநிலம், ரோசையா பஜாா், பச்சைப்பூரைச் சோ்ந்தவா் ரவீந்தா் யாதவ் (40). இவா், மதுரை எச்எம்எஸ் குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கி, மாா்பிள் பாலீஸ் போடும் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ரவீந்தா் யாதவ், தனது நண்பா் பாஸ்கரனுடன் முடக்குச் சாலையில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்துக்கு சென்றாா். அப்போது, அங்கு வந்த சம்மட்டிபுரம் ஜெகராம் தெருவைச் சோ்ந்த வினோத்குமாா் (20) ரவீந்தா் யாதவிடம் மது கேட்டுள்ளாா்.

இதற்கு மறுத்ததால், அவரைத் தாக்கியதோடு, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com