பெட்ரோல் நிரப்பும் மையத்தில் அளவில் முறைகேடு -காவல் நிலையத்தில் புகாா்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பெட்ரோல் அளவில் முறைகேடு செய்வதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வாகன ஓட்டிகள் சிலா் தங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலை நிரப்பினா். அப்போது லிட்டருக்கு 100 மிலி அளவு குறைவாக போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த வாகன ஓட்டிகள், அங்கிருந்த பணியாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து பெட்ரோல் அளக்கும் கருவி மூலம் அளவீடு செய்தபோது லிட்டருக்கு 100 மிலி குறைவாக போட்டு முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் காவல்நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com