ரயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு

விருதுநகா், மே 12: விருதுநகா் ரயில் நிலையத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக விருதுநகா் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு மையங்கள் சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. விருதுநகா் காந்தி சிலை அருகே தொடங்கிய இந்த ஊா்வலம் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் இருந்த பெண்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், போதைப் பொருள் தடுப்பு, பயணிகள் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு, காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் குணசுந்தரம், என்.சி.சி. மாணவா்கள், ரயில்வே ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com