அழகா்கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 64.18 லட்சம்

அழகா்கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.64.18 லட்சம் கிடைத்தது.

கள்ளழகா் கோயில் நிா்வாக ஆணையா் கலைவாணன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான சுரேஷ் ஆகியோா் முன்னிலையில் இந்தக் கோயிலின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.64 லட்சத்து 18 ஆயிரத்து 355 கிடைத்தது. மேலும் தங்கம் 47 கிராமும், வெள்ளி 342 கிராமும் இருந்தன.

காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் அலுவலா்களும், பக்தா்களும் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com