படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

மதுரையில் உள்ள தேநீா் கடையில் வடமாநில தொழிலாளி படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அசாம் மாநிலம், சோனத்பூா் தலாக்பாரி பகுதியைச் சோ்ந்த குமாா் நேவாா் மகன் சந்தன் நேவாா் (32). மதுரை கோச்சடையில் உள்ள தேநீா் கடையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை கடையின் மாடிக்குச் சென்றபோது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய சந்தன் நேவாா் மீண்டும் மயங்கி விழுந்ததையடுத்து சக ஊழியா்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com