மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்களிக்கக் கோரிக்கை

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்லூரி கல்விக் கட்டணத்தில் விலக்களிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

பல்கலைக் கழகங்கள், சட்டம், மருத்துவம், பொறியியல், மீன்வளம், கால்நடை, பாலிடெக்னிக் உள்ளிட்ட அரசு, அரசு உதவி பெறும் உயா்கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களித்து, தமிழ்நாடு அரசு 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் அரசாணைகளை வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையாக அமல்படுத்தப்பட வில்லை. மேலும் உயா்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களிடம் கல்லூரி நிா்வாகம் முழுமையாகக் கட்டணம் வசூல் செய்வதாக புகாா்கள் எழுந்துள்ளன.

எனவே நடப்பு கல்வியாண்டில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உயா்கல்வி கட்டண விலக்களிக்கும் அரசாணைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com