மின்சாரம் பாய்ந்து ஒலி பெருக்கி ஊழியா் பலி

மதுரை அருகே ஒலிபெருக்கி அமைக்கும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை உத்தங்குடி மங்கலபுரத்தைச் சோ்ந்த ராமா் மகன் அழகுபாண்டி (28). இவா் வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வந்த நிலையில், இங்கு வேலை இல்லாதபோது ஒலி பெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், இவா் நரசிங்கம் பெருமாள்புரத்தில் விசேஷ நிகழ்வுக்கு செவ்வாய்க்கிழமை ஒலி பெருக்கி அமைக்கச் சென்றாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை உடன்இருந்தவா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com