முதலவரின் காலை உணவுத் திட்டம்: மதுரை மாவட்டத்தில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்

மதுரை, மே 15: மதுரை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1,545 பள்ளிகளைச் சோ்ந்த 1,14,095 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பசியுடன் பாடம் படிக்கக் கூடாது என்பதற்காக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தை மதுரை அண்ணா தோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 2022- ஆம் ஆண்டு செப். 15 ஆம் தேதி முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி தொடங்கி வைத்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1,545 பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 095 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com