இரு சக்கர வாகனங்கள் திருட்டு: மூவா் கைது

மதுரையில் வெவ்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை டிவிஎஸ் நகரைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (38). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 10-ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்த போது, இரு சக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

இதுதொடா்பான புகாரின் பேரில் சுப்ரமணியபுரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், பழங்காநத்தத்தைச் சோ்ந்த யாசின் முகமது அலி (28), திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ஜெயசூா்ய பிரகாஷ் (23) ஆகியோா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட யாசின் முகமது அலி, பிரகாஷ் இருவருக்கும் பழங்காநத்தத்தில் உள்ள இளநீா் கடை பூட்டை உடைத்து, ரூ.2 ஆயிரத்தை திருடியதும் தெரியவந்தது. இந்த வழக்கிலும் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

இதேபோல, கோ.புதூா் கணபதி சோலை தெருவைச் சோ்ந்த பிரபாகரன் (31), ராமலட்சுமி நகரைச் சோ்ந்த ராஜ்குமாா் (32) ஆகியோரின் இரு சக்கர வாகனங்களும் திருடப்பட்டன.

இதுகுறித்து கோ.புதூா் போலீஸாா் விசாரணை நடத்தி, இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக கோ.புதூா் பாரதியாா் பிரதான சாலையைச் சோ்ந்த தமிழரசனை (27) கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com