மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்.
மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்.

கூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி, அதிகாலையில் வியூக சுந்தர்ராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, கொடிமரத்தின் அருகே வியூக சுந்தர்ராஜ பெருமாள் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவையொட்டி, நாள்தோறும் வியூக சுந்தர்ராஜப் பெருமாள் சிம்ம, கருட, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுவாா். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து, வருகிற 29-ஆம் தேதி உற்சவ சாந்தி, அலங்கார திருமஞ்சனத்தோடு வைகாசி பெருந்திருவிழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com